தற்கொலை எண்ணம் எனக்கும் வந்துள்ளது… அம்மா கொடுத்த நம்பிக்கை – ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 12 ஜனவரி 2024 (09:20 IST)
தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். ரோஜா படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து அவருக்கு அந்த படத்திலேயே தேசிய விருதையும் பெற்று தந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழிப் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளரானார்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிந்த இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான் ஹாலிவுட்டுக்கும் சென்று இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக பெற்று வந்தார்.  இப்போது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தற்கொலை எண்ணம் குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் “எனக்கும் தற்கொலை எண்ணம் வந்துள்ளது. அப்போது என்னுடைய அம்மா நீ மற்றவர்களுக்காக வாழும்போது இந்த எண்ணம் வராது எனக் கூறினார். பிறருக்காக நாம் வாழும்போது நாம் சுயநலமாக இருக்கமாட்டோம். மற்றவருக்காக வாழ்தல் என்பது இசையமைப்பாதகவோ அல்லது அடுத்தவருக்கு உணவு வாங்கி கொடுப்பதாகவோ அல்லது ஒரு சிறு புன்னகையை உதிர்ப்பதாகவோ கூட இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்