பிக்பாஸ் வீட்டில் இருந்தபடியே சினிமா வாய்ப்பைப் பெற்ற மாயா கிருஷ்ணன்!

vinoth
வெள்ளி, 12 ஜனவரி 2024 (09:12 IST)
பிரபல குணச்சித்திர நடிகை மாயா கிருஷ்ணன். தனுஷுடன் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் கவனம் பெற்றது. இதையடுத்து இப்போது பிக்பாஸ் இல்லத்துக்கு சென்றுள்ள அவர் அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அவரைக் கண்டிப்பதில்லை என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது மாயாவுக்கு ஒரு சினிமா வாய்ப்பு பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கிடைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் இயக்கவுள்ள புதிய படத்தில் மாயா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்