அடுப்பில் கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து முந்திரிப்பருப்பை போட்டு வறுக்கவும். முந்திரிப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் சேமியாவை சேர்த்து வறுக்கவும்.
பிறகு அதனுடன் 1 1/4 கப் தண்ணீர், கேசரி கலர் சேர்த்து சேமியா வேகும் வரை நன்கு கிளறவும். சேமியா வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கேசரி கெட்டியாகும் வரை நன்கு கிளறவும். இறுதியில் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யும், ஏலக்காய் பவுடரும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான சேமியா கேசரி தயார்.