செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராடசை இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து இடையிடையே கிளறி விடவும். அரிசி நன்கு வெந்து பால் பாதியாக குறைந்ததும் சீனியை சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இறுதியில் நெய், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான அரிசி பாயாசம் தயார்.