சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளசும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கி பிறகு, மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் சிக்கன் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
சிக்கன் தண்ணீர் விடுவதால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இடை இடையே கிளறி விடவும். 20 நிமிடங்களில் சிக்கன் வெந்து விடும். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்க்கவும்.
கிரேவி கெட்டியானதும் இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும். சுவையான சிக்கன் கிரேவி தயார். இவை சாதம், பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.