அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரும்வரை, கிளறிக் கொண்டே இருக்கவும்.
பின்னர் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை விட்டு, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும். பாயசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் பொடியாக நறுக்கிய தேங்காய் மற்றும் முந்திரியை போட்டு சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சுவையான சுலபமான பச்சரிசி பாயசம் தயார்.