கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் தயார். இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆறவைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.
பயன்கள்:
வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.