தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து பின்னர் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
இதனிடையே அண்மையில் மயோசிஸ் என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார். இவர் தற்போது யசோதா என்ற படத்தில் வாடகை தாயாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 11ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இதன் ப்ரோமோஷனில் பங்கேற்ற சமந்தா வாடகை தாய் முறை சரியானதா என கேட்டதற்கு, " எனக்கு எதை பற்றியும் கருத்துக்கள் கிடையாது. நீங்கள் எதை மற்ற சொன்னாலும் மாற்றுக்கொள்வேன் என கூறினார். உங்களுக்கு எது மகிழ்ச்சியை கொடுக்குமோ அதை செய்வேன் என கூறி ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்துவிட்டார்.