உள்ளாடை Size கேட்ட நபருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (18:33 IST)
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் பிரியா பவானி சங்கர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் உங்களது சைஸ் என்ன என்று கேட்டதற்கு, என்னுடைய சைஸ் 34டி. நான் ஒன்றும் மார்பகங்களை வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அவை இருக்கும். அவர்களின் டீ-ஷர்ட் வழியாக ஜூம் செய்துபார்த்தால் உங்களுக்கு அது தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்