#ShameOnYuviBhajji: சிங்குகளை சின்னாபின்னமாக்கும் நெட்டிசன்கள்!!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (12:09 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ShameOnYuviBhajji என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
உலகத்தை முடக்கி போட்டுள்ள கொரோனா இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில், பாகிஸ்தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, ஷாகித் அஃப்ரிடிக்கு ஆதரவாக பதிவிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங், இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 
 
இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஷாகித் அப்ரிடி குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவுக்கு குரல் கொடுக்காத நீங்கள் பாகிஸ்தானுக்காக மட்டும் எப்படி குரல் கொடுக்கீற்கள் என கேள்விகளால் துளைத்து வருகின்றனர். 
 
இதனால் காலை முதலே சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ShameOnYuviBhajji என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதே போல #IStandWithYuvi என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்