ரஜினிகாந்த் கொரோனா விழிப்புணர்வு குறித்தும், சுய ஊரடங்கிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும் ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
அதில், பதிவு செய்த காணொளியில் 12 முதல் 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று நான் கூறியிருந்தால், அது இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் டுவிட்டர் நிர்வாகம் அதை நீக்கி உள்ளது என விளக்கியிருந்தார்.
இருப்பினும் இது கிண்டலுக்கு உள்ளாகியது. அந்த வகையில் இது குறித்து திமுகவை சேர்ந்த விழுப்புரம் எம்பி ரவிக்குமார், கொரொனா குறித்து தவறான தகவலைத் தருவதாகக் கூறி திரு ரஜினிகாந்த் ட்வீட் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அகற்றியுள்ளது. அரசியல் தளத்திலும் அப்படி வசதி இருந்தால் அவரது பல கருத்துகள் பலவற்றுக்கும் அதுதான் நேர்ந்திருக்கும் என கிண்டலடித்துள்ளார்.