இன்று தான் யுவராஜ்சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்த தினம்: டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:40 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்து தினம் இன்று தான் என்பதை அடுத்து அவரது ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர். 
 
கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. அந்த போட்டியில் யுவராஜ் சிங் இந்திய அணியின் சார்பாக களத்தில் இறங்கியபோது பிராட் பந்தில் ஒரு ஓவரில் 6 பந்துகளில் சிக்சர் அடித்து விளாசினார்
 
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி நடந்த இந்த போட்டியில் அவர் 6 சிக்சர்களை அடித்ததை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்றும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் இதுகுறித்து ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்