உலகக்கோப்பை டி20 பயிற்சி ஆட்டம்: இந்திய அணி அபார வெற்றி!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (17:34 IST)
உலகக்கோப்பை டி20 பயிற்சி ஆட்டம்: இந்திய அணி அபார வெற்றி!
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன 
 
இன்றைய பயிற்சி ஆட்டம் இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா லெவன் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 159 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கு ஆஸ்திரேலியா லெவன் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி 35 பந்துகளில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பந்துவீச்சில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்