சமீபகாலமாக இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான். இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.