கேட்ச் பிடிக்கவந்த பவுலரை தடுத்து நிறுத்திய மேத்யு வேட்… அவுட் வழங்காத நடுவர்!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (15:26 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி 20 தொடர் தற்போது நடந்து வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஓவரில் திரில் வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த போட்டியில் ஒரு விஷயம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆஸி அணியின் பேட்ஸ்மேன் மேத்யு வேட் மார்க் வுட் 17 ஆவது ஓவரில் பந்தை அடிக்க அது மேலே சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க, மார்க் வுட் ஓடிய போது அவரைக் கேட்ச் பிடிக்க விடாதவாறு வேட் தடுத்து நிறுத்தினார். இந்த செயலுக்கு நடுவர் அவரை தண்டிக்கும் விதமாக விக்கெட் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணிக் கேப்டன் பட்லரும் அவுட் கேட்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்