உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு செல்லும் 4 நாடுகள் எவை எவை?

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (08:23 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அனைத்து அணிகளும் ஏழு போட்டிகள் விளையாடி முடித்து விட்ட நிலையில் இன்னும் ஒரு சில போட்டிகளை மீதம் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் முதல் நான்கு இடத்தில் இருந்தாலும் இந்தியா மட்டுமே  அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த  நிலையில் தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகள் உடன் வலிமையான நிலையில் உள்ளது.  ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் இருந்தாலும் இன்னும் அந்த அணிக்கு இரண்டு போட்டிகள் உள்ளது. அதேபோல் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா எட்டு புள்ளிகளுடன்  நான்காவது மட்டும் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் இந்த இரு அணிகளுக்கும் இன்னும் ஒரே ஒரு போட்டி தான் உள்ளது. இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட பத்து புள்ளிகள் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆனால் அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி தற்போது 8 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில் இரண்டு போட்டிகள் அந்த அணிக்கு இருப்பதால் இரண்டிலும் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவே இப்போதைக்கு இந்தியா மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளில் எந்த மூன்று அணிகள் வேண்டுமானாலும் அரை இறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்