இங்கிலாந்து அணிக்கு இன்னொரு தோல்வி.. ஆஸ்திரேலியா அபார ஆட்டம்..!

சனி, 4 நவம்பர் 2023 (22:20 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 287 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடிய நிலையில் அந்த அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்  10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.. இங்கிலாந்து அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்