கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

vinoth

வியாழன், 10 ஏப்ரல் 2025 (08:03 IST)
நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இளம் வீரர் பிரயான்ஷ் ஆர்யாவின் அபார சதத்தால் பஞ்சாப் அணி 219 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய சி எஸ் கே அணி 201 ரன்கள் மட்டுமே சேர்த்து தோற்றது.

பிரயான்ஷ் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் அதிரடி சதம் கண்டார். குறைந்த பந்துகளில் ஐபிஎல் தொடரில் சதமடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய  இவர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி கவனம் பெற்றவர். அவரின் அந்த இன்னிங்ஸ்தான் ஐபிஎல் தொடரில் அவரை ஏலத்தில் எடுக்கக் காரணமாக அமைந்தது என சொல்லலாம்.

இந்நிலையில் பிரயான்ஷின் தந்தை பவன் ஆர்யா தன்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு கவுதம் கம்பீர் கொடுத்த அறிவுரைப் பெரிதும் உதவியது எனக் கூறியுள்ளார். அதில் “உள்ளூர் போட்டி ஒன்று பிரயான்ஷ் சிறப்பாக விளையாடியதைப் பார்த்து அப்போது முதல் 7 வருடங்களாக கம்பீர் அவனுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாட சொல்லி அவர்தான் அறிவுறுத்தினார். வெப்பமான மற்றும் அழுத்தமான சூழலில் விளையாட வேண்டும் என்றும் எவ்வளவு அதிகமான போட்டிகளில் விளையாட முடியுமோ, அவ்வளவு போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் கூறினார். அதுதான் என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்