2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில், கிரிக்கெட் போட்டி 128 ஆண்டுகள் கழித்து மீண்டும் இடம் பெறுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 அணிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஐசிசி முழுநேர உறுப்பினர் நாடுகள் 12 இருந்தாலும், ஒலிம்பிக்ஸில் வெறும் 6 அணிகள் மட்டும் விளையாடும் வாய்ப்பு பெறுவதை அடுத்து ஆர்வம் கூடியுள்ளது.
அமெரிக்கா ஒலிம்பிக்ஸ் நடத்தும் நாடாக இருப்பதால், அமெரிக்க அணி நேரடி வாய்ப்பு பெற்றுள்ளது. மீதமுள்ள 5 அணிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படும் என்ற விவரம் தற்போது வெளியாகவில்லை. தேர்வு முறை மற்றும் பங்கேற்கும் அணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.