மகளிர் ஐபிஎல்: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி..!

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (08:47 IST)
மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற த்ரில் போட்டியில் டெல்லி அணி ஒரே ஒரு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்த நிலையில் 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூர் மகளிர் அணி களத்தில் இறங்கியது., ஆனால் அந்த அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து டெல்லி அணி ஒரே ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

பெங்களூர் அணி கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் முதல் பந்திலையே சிக்ஸர் அடித்ததால் அந்த அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் மூன்றாவது பந்தில் ஒரு விக்கெட் விழுந்ததை அடுத்து டெல்லி அணிக்கு வாய்ப்பு கிடைத்தது

ஆனால் அதே நேரத்தில் நான்காவது பந்தில் இரண்டு ரன்களும் ஐந்தாவது பந்தில் ஆறு ரன்களும் எடுத்த நிலையில் ஆறாவது பந்தில்  இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆறாவது பந்தில் விக்கெட் விழுந்தது

இதனை அடுத்து டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் டெல்லி அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் மும்பை பெங்களூர் அணிகள் இரண்டாவது மூன்றாவது இடத்திலும் உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்