கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா கோலி?

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:37 IST)
இந்திய அணி வெற்றிக்கேப்டன் கோலி லிமிடெட் ஓவர் போட்டிகளில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரின் பேட்டிங்கில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பைக்கு பின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு கோலி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தேசிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுப்பதற்காக இந்த முடிவை அவரே விரைவில் அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்