தல இஸ் பேக்: சிஎஸ்கே ஜெர்சியில் தோனியின் வைரல் புகைப்படம்!!

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (16:31 IST)
ஐபிஎல் போட்டியில் இரண்டு ஆண்டு தடை நீங்கியதை அடுத்து ஆரவாரத்தில் இருக்கிறார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள்.


 
 
இந்நிலையில், ரசிகர்களை இன்னும் குஷி படுத்த தோனி சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிந்து உள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸுக்கான மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து முகத்தை காட்டாமல் தனது ஜெர்சியின் பின்புறத்தில் தனது எண் மற்றும் தனது பெயரை தல என்று எழுதியுள்ளதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார் தோனி. 
 
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்