புவனேஷ்வர் குமார் வீசிய பந்து தாக்கி, அம்பயர் காயம்!!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (16:32 IST)
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் பேட்டியின் போது புவனேஷ்வர் குமார் வீசிய பந்து தாக்கியதில் அம்பயர் பால் ரைய்பல் காயமடைந்தார்.


 
 
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இத்தொடரில் 2–0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
 
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் போது இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் வீசிய பந்து  அம்பயர் பால் ரைய்பல் பின்பக்க தலையில் தாக்கியது. 
 
அவர் தரையில் சுருண்டு விழுந்தார். உடனடியாக இங்கிலாந்து அணியின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவர்கள் ஓடிவந்து சிகிச்சை அளித்தனர். 
 
இதனையடுத்து அவர் மேற்கொண்டு சிகிச்சை பெற மைதானத்தை விட்டு வெளியேறினார். பால் ரைய்பல் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 
 
இதனையடுத்து அவருடைய பொறுப்பிற்கு மற்றொரு நடுவர் மராய்ஸ் எராசும்ஸ் நிறுத்தப்பட்டார். 
அடுத்த கட்டுரையில்