இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் டெஸ்ட் அணியின் கேப்டனுமான விராட் கோலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர்.
எங்கு சென்றாலும் இவர்களை புகைப்படம் எடுக்க ஊடகங்கள் இவர்களை சுற்றி சுற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜின் திருமண விழாவிற்கு கோலியும் அனுஷ்காவும் ஜோடியாக வந்தனர்.
திருமண விழா முடிந்து செல்லும் போது கோலியையும் அனுஷ்காவையும் புகைப்படம் எடுக்க ஊடகங்கள் காத்திருக்க அவர்களை கண்டுகொள்ளாமல் வேகமாக கடந்து சென்றார் கோலி. ஆனால் அனுஷ்கா ஷர்மா கோலியை பிடித்து இழுத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்க வற்புறுத்தி நிற்க வைத்தார். இருவரும் ஜோடியாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.