19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை… இந்திய அணியில் தமிழக வீரர்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:07 IST)
அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் 19 வயதுக்கு உட்படட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது.

U19 உலகக்கோப்பையில் இந்திய அணி 4 முறை கோப்பை வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது சுழல்பந்து வீச்சாளர் மானவ் பராக் இடம்பெற்றுள்ளார்.

உலகக்கோப்பைக்கான அணி:-
யாஷ் துல் (கேப்டன்), ஹர்நூர் சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்.கே.ரஷீத் (து.கேப்டன்), நிஷாந்த் சித்து, சித்தார்த் யாதவ், அனீஷ்வர் கவுதம், தினேஷ் பானா (வி.கீ), ஆராத்ய யாதவ் (வி.கீ), ராஜ் அங்கத் பவா, மானவ் பராக், கவுஷல் தாம்பே, ஹங்கர்கேக்கர், வாசு வாட்ஸ், விக்கி ஆஸ்ட்வால், ரவிக்குமார், கேரி சங்வான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்