இன்று சென்னை-டெல்லி மோதல்: முதலிடம் யாருக்கு?

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (08:17 IST)
இன்று சென்னை-டெல்லி மோதல்: முதலிடம் யாருக்கு?
ஐபிஎல் தொடரின் 50ஆவது போட்டியான இன்று டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐபிஎல் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சென்னை அணி ஆரம்பம் முதலே சூப்பராக விளையாடி வருகிறது என்பதும், இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை அணியின் ரன் ரேட் 0.829 என்பது குறிப்பிடத்தக்கது
 
 அதேபோல் டெல்லி அணியும் 12 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளது என்பதும் அந்த அணியின் ரன் ரேட் 0.551 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மற்றும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்