ஆசிய கோப்பை கிரிக்கெட்.. வங்கதேசத்தை எளிதாக வென்ற இலங்கை..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:17 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி மிக எளிதில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 42.4 ஓவர்களில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. நஜ்முல் என்பவர் மட்டும் நிலைத்து ஆடி 89 ரன்கள் எடுத்தார். 
 
இதனை அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 39 அவர்களின் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. சதீர விக்ரவர்மா 54 ரன்களும், அஸ்லாங்கா 62 ரன்களும் அடித்தனர் 
 
இதனை அடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தல ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது  ’
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்