ஐபிஎல் போட்டியின் இந்த சீசனில் எந்த அணி வேண்டுமானாலும் 300 ரன்கள் அடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் இந்த சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ப்ளே ஆப்க்கு தகுதி பெறுவதற்காக பல அணிகளும் மல்லுக்கட்டி வருகின்றன. ஐபிஎல்லில் பொதுவாக 250க்கும் அதிகமான ரன்களை 20 ஓவர்களுக்குள் அடிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 287 ரன்களை அடித்து அதிக ஸ்கோர் அடித்த சாதனையை படைத்தது.
இந்த சீசனில் பல அணிகள் 250+ என்ற ரன்களை நெருங்கும் நிலையில் இந்த சீசனில் அதிகபட்சமாக எந்த அணியாவது 300 ரன்களை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் உள்ளது.
இதுபற்றி பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் “எங்களால் 300 ரன்களை குவிக்க முடியும். 300 ரன்களை குவிப்பது முக்கியம் என்னும் நிலைக்கு இந்த சீசன் நகர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 என்ற இமாலய டார்கெட்டை சேஸ் செய்தது. இந்த தொடரில் பல அணிகள் வலிமையாக உள்ளது. எந்த அணி வேண்டுமானாலும் 300 ரன்களை தொட்டுவிட முடியும்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K