டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

Prasanth Karthick

ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (10:35 IST)

ஐபிஎல் சீசனின் Revenge Week பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்று MI vs LSG மற்றும் RCB vs DC என்று இரண்டு பரபரப்பான போட்டிகள் நடைபெற உள்ளது.

 

புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸும் தலா 12 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளன. இன்றைய வெற்றி பெறும் அணி முதல் இடத்தை பெறும் என்பதால் இந்த போட்டி எதிர்பார்ப்பில் உள்ளது.

 

சின்னசாமியில் வைத்து தன்னை பிரித்த அணிகளை எல்லாம் ஆர்சிபி அவர்களது ஹோம் க்ரவுண்டுக்கே சென்று ரிவெஞ்ச் எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று டெல்லியில் நடைபெறும் போட்டியில் அங்கு வைத்தே டெல்லியை வீழ்த்த ஆர்சிபி தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதேபோல புள்ளிப்பட்டியலில் தலா 10 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் 5 மற்றும் 6ம் இடத்தில் உள்ளன. இன்று வெற்றி பெறும் அணி முதல் 4 இடத்திற்குள் செல்ல வாய்ப்பு உள்ளதால் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆரம்பத்தில் மும்பை அணி படுதோல்விகளை சந்தித்து வந்தாலும் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து அதிரடி வெற்றிகளை குவித்து வருகிறது. அப்படி மும்பை வீக்காக இருந்த நேரத்தில் அடித்துத் துவைத்த அணிகளில் லக்னோவும் ஒன்று. தற்போது திரும்ப ஃபார்முக்கு வந்துள்ள மும்பை இந்த பழைய கணக்கை இன்று நேர்செய்ய முற்படும் என தெரிகிறது. அதுவும் போட்டி வான்கடேவில் என்பதால் மும்பை ரசிகர்களுக்கு இது ஐஸ் ஆன் தி கேக்தான்.

 

MI vs LSG போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், RCB vs DC போட்டி மாலை 7.30 மணிக்கும் நடைபெற உள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்