இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் திடீரென சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா ஆகிய இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் குழந்தையை சந்திக்க மட்டுமே அவர்கள் இருவரும் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த செய்திக்கு வலு சேர்க்கும் வகையில் சானியா மிர்சாவின் இந்த இன்ஸ்டா பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் பிரிந்து வாழ்வதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் பாகிஸ்தான் ஊடகங்களில் இருவரும் பிரிந்து வாழ்வதை உறுதி செய்துள்ளன.
இந்த நிலையில் விரைவில் சானியா மிர்சா தனது கணவரை விவாகரத்து செய்வதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் கடினமான நாட்களை கடந்து செல்லும் தருணங்கள் என்ற தலைப்புடன் தனது மகனுடன் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது