இதையடுத்து 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸி அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸி 228 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து நான்காம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 4 விக்கெட்களும் சிராஜ் மூன்று விக்கெட்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது ஆஸி அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி விக்கெட்டுக்கு ஸ்காட் போலண்ட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் 55 ரன்கள் சேர்த்து அணியைக் காப்பாற்றினர்.