ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம்: 200 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (13:56 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய நிலையில் தற்போது 2-வது இன்னிங்சில் அரைசதம் அடுத்துள்ளார்.
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் இந்தியா எடுத்தது என்பதும் நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி சற்றுமுன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னணி பேட்ஸ்மேன்களான மயங்க் அகர்வால், கில், புஜாரே, ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து ஆடினார்கள்
 
அஸ்வின் 32 ரன்களில் அவுட்டான ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு துணையாக சஹா விளையாடி வருகிறார் 
 
இந்திய அணி தற்போது 200 ரன்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் நியூசிலாந்து அணிக்கு சவால் விடும் வகையில் தான் இந்த டெஸ்ட் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்