இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடாததால் அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடினார் கே எல் ராகுல். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால் பலரும் புதுப்பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் ராகுல் சிறப்பாக இருக்கிறார். அதனால் அவரையே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வைக்கவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் தேவாங்க் காந்தி “என்னைக் கேட்டால் ரோஹித் ஷர்மா ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டும் என சொல்வேன். ஏனென்றால் ரிஷப் பண்ட் வரை அவரவர் இடத்துக்கு தங்களை சிறப்பாக உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார். கடந்த சில இன்னிங்ஸ்களாக ரோஹித் ஷர்மா நீண்ட இன்னிங்ஸ்கள் ஆட முடியாமல் தடுமாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.