கேப்டன் யார் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை… ரிஷப் பண்ட்டுக்கு ஷாக் கொடுத்த சஞ்சய் கோயங்கா!

vinoth

செவ்வாய், 3 டிசம்பர் 2024 (10:14 IST)
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டார். கடந்த ஆண்டு ராகுலுக்கும் அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து நடந்த மெஹா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்தது. இதுவரை ஐபிஎப் தொடரில் எந்தவொரு அணியும் இவ்வளவு தொகை செலவு செய்து ஒரு வீரரை ஏலத்தில் எடுத்ததில்லை.

இதனால் லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள சஞ்சீவ் கோயங்கா “எங்கள் அணியின் கேப்டன் யார் என்பது குறித்து இதுவரை யோசிக்கவில்லை. எங்கள் அணியில் நான்கு தலைவர்கள் உள்ளனர். ரிஷப் பண்ட், மார்க்ரம், பூரான் மற்றும் மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். அதனால் வியூகம் அமைத்து செயல்படுவதில் சிக்கல் இருக்காது” எனக் கூறியுள்ளார். சஞ்சீவ் கோயங்கா இவ்வாறு பேசியிருப்பது ரிஷப் பண்ட்டுக்கு பெரிய ஷாக்காக அமைந்திருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்