அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.
இது குறித்து இருவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் பேசும்போது ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்த ஒத்துக்கொண்டு அதற்காக லாபத்தில் பங்கு கேட்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் நாம் இந்தியாவோடு நட்புறவோடு விளையாட வேண்டும். அவர்கள் நாட்டுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டுமென்பதுதான் என் ஆசை.” எனக் கூறியுள்ளார்.