ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவியில் தோல்வி அடைந்தாலும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார்.
சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி பெஹர் -நினோமியா ஜோடியை இன்று களம் கண்டது. இதில் சானியா போபண்ணா ஜோடி 6 - 4, 7 - 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தற்போது கால் இறுதி சுற்றிற்கு முன்னேறி உள்ளது
டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில் அவர் விளையாடும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி இது என்பதால் இந்த போட்டியில் அவர் இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்தாலும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.