சாம் கர்ரன் திடீர் விலகல்: சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:09 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான சாம் கர்ரன் திடீரென விலகி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சாம் கர்ரன் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இருந்தும் அவர் இங்கிலாந்து அணியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதுகு தண்டு பகுதியில் சாம் கர்ரனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரர்கள் ஏராளமானவர்கள் இருப்பதால் எந்த பின்னடைவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்