பாலோ ஆன் ஆனது தென்னாப்பிரிக்கா: 2வது இன்னிங்ஸிலும் சொதப்பல் ஆட்டம்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (14:09 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இரட்டை சதமும், ரஹானே சதமும் அடித்தனர் 
 
இந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. இன்று மீண்டும் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா, ஷமி மற்றும் நதீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 335 ரன்கள் பின் தங்கியிருந்த தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆகி தற்போது2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசியதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி 4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய அணி இந்த போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்