இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும், ஏராளமான ரசிகர்களையும் கொண்டவராக இருப்பவர் விராட் கோலி. ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.
அவர் தற்போது ஓய்வை அறிவிப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் பேசி வந்த நிலையில், விராட் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பிசிசிஐயும் பேசி வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜாக்ரான் என்ற வட இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி பிசிசிஐ கோலியிடம் அப்படி எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவான வண்ணம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.