பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும், ஏராளமான ரசிகர்களையும் கொண்டவராக இருக்கிறார் விராட் கோலி. ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.
சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவர் தற்போது ஓய்வை அறிவிப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் பேசி வந்த நிலையில், விராட் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பிசிசிஐயும் பேசி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார் விராட் கோலி. டெஸ்ட்டில் தனது 14 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வருவதாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
Edit by Prasanth.K