இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கள்: சொல்லி அடித்த கோஹ்லி

ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (16:51 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 497 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இன்னும் சில ஓவர்கள் விளையாடியிருந்தால் 500 ரன்களை எட்டியிருக்கும் என்ற போதிலும் எதிரணியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் விராத் கோஹ்லி டிக்ளேர் செய்தார்.
 
அவரது முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் எல்கர் மற்றும் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் டீகாக் ஆகிய இருவரின் விக்கெட்டுக்களும் விழுந்தது. ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களை வீழ்த்தினர்.
 
இதனையடுத்து போதிய வெளிச்சம் இல்லை என்பதால் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் அந்த அணி இன்னும் 488 ரன்கள் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தொடக்க ஆட்டக்காரர்களை முதலிலேயே வீழ்த்திவிட்டதால் இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி ஃபாலோ ஆன் ஆக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்