28 வது சதம் அடித்த ரோஹித் சர்மா ...ரசிகர்கள் உற்சாகம் ...

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (16:23 IST)
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதில், தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா தனது 28 வது சதம் அடித்து அசத்தினார்.
மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  மூன்று போட்டிகள்  தொடரில் சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. 
 
இந்நிலையில் , இன்று இந்தியா - மேற்கு இந்திய அணிகள் மோதும்  இரண்டாவது போட்டி துறைமுக நகரான விசாகபட்டிணத்தில்  பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது.
 
இப்போட்டியில் மேற்கு  இந்திய அணி கேப்டன் கீரோன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
 
மேலும், இப்போட்டியில் கட்டாயம் வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இந்ந்நிலையில், இந்திய முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், , ரோஹித் சர்மா 124 பந்துகளுக்கு128 ரன்கள் எடுத்துள்ளார்.   இவர் 107 பந்தில் தனது 28 வது சதம் அடித்துள்ளார். சிரேஸ் ஐயர் இரு பந்துகளுக்கு 1 ரன் எடுத்து ஆடி வருகிறார்.
 
தொடக்க வீரராக களம் இறங்கிய ராகுல் 104 பந்துகளுக்கு  102 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் கொடுத்தார்.இவர் பொல்லார்டு பந்தில் ரோட்சனிடன் கேட்ஸ் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கோலி, அதேபோல் பொல்லார்டு பந்தில் ரோட்சனிடன் கேட்ஸ் கொடுத்து அவுட்டானார். 
 
இந்நிலையில், 38.4 ஓவர்களுக்கு 243 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்