இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவர்கள் முடிவில் இரண்ட்டே விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.
வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி ”நானும் ரோகித் ஷர்மாவும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடவில்லை. இந்த மைதானம் மிகவும் மெதுவானது என்பதால் இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலாக விளங்கியது. வேகப்பந்து வீச்சாளர்களால் பந்தை பிடித்து நேர்த்தியாக வீச முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களும் பெரும் நெருக்கடி அளித்தனர். ஆனால் இந்த மைதானத்தின் தன்மை அறிந்து வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக விளையாடினார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் டி.வி. ரிப்ளே பார்த்து ஃபீல்டருக்கு சொன்னது குறித்து பேசிய அவர் ”ஆடுகளத்திற்கு வெளியே டி.வி. ரிப்ளே பார்த்து பீல்டருக்கு சொல்லி, அதை வைத்து நடுவர் மறு ஆய்வு செய்வதெல்லாம் கிரிக்கெட் விதிமுறையில் உள்ளதா? என தெரியவில்லை. நடுவர்கள் இதுப்போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.