தோற்ற ஆத்திரத்தில் சுப்மன் கில் தங்கை மீது பாய்ந்த ஆர்சிபி ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (08:32 IST)
ஐபிஎல் லீக் போட்டிகளின் கடைசி போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்த நிலையில் ஆர்சிபி ரசிகர்கள் தங்கள் கோபத்தை சுப்மன் கில் தங்கை மீது காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் சீசன்கள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று முன்தினம் நடந்த கடைசி போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆப் தகுதி பெற வாய்ப்பு இருந்தது. 197 ரன்கள் குவித்திருந்த ஆர்சிபியை குஜராத் டைட்டன்ஸ் அணி 198 ரன்களை குவித்து தோற்கடித்தது.

இந்த போட்டியில் குஜராத் அணி வீரர் ஷுப்மன் கில் அடித்த சதம் குஜராத் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது. குஜராத் அணி வென்றதை ஷுப்மன் கில்லின் தங்கை ஷானில் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ஆனால் தோல்வியடைந்த கோபத்தில் இருந்த ஆர்சிபி ரசிகர்கள் ஷானில்லின் பதிவின் கமெண்டுகளில் ஷுப்மன் கில் குறித்தும், அவரது குடும்பம் குறித்து மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஷானில்க்கு ஆதரவாக குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் பலரும் பதிவிட தொடங்கியுள்ளனர்.

ஐபிஎல்லை வெறும் விளையாட்டாக பார்க்காமல் உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கொள்வது இதுபோன்ற தவறான நடத்தைகளை உண்டாக்கி விடுவதாக பொதுவான ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்