அதிகவே அரைசதம் இலக்கை எளிதாக்கிய ராகுல்

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (18:58 IST)
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக அடி அதிவேக அரைசதம் விளாசினார்.

 
ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர் கேஎ.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதில் 4 சிக்ஸர் அடங்கும். 
 
அதிரடி மன்னம் கெயில் இல்லாத குறையை இவர் தீர்த்துவிட்டார். இதனால் பஞ்சாப் அணிக்கு இலக்கு மிகவும் எளிதாகிவிட்டது. தற்போது வரை பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்