அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து நான்கு ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 162 ரன்கள் இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் இந்திய அணியில் நடக்கவுள்ள மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் “அணியில் என்னன்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இப்போதே பேசுவது சீக்கிரமானது. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. இதனால் அணியில் மாற்றங்கள் நடக்கலாம். எது நடந்தாலும் அணியின் நன்மைக்காகவே இருக்கலாம்.” எனக் கூறியுள்ளார்.