சாம்பியன்ஷிப் டிராபி கோப்பையை வென்றதன் மூலம் 8வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவுடனான லீக் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து அனைத்து போட்டிகளிலும் வென்று பாகிஸ்தான் கோப்பையையும் கைப்பற்றி உள்ளது. இந்த தொடர் வெற்றிகளால் பாகிஸ்தான் அணியின் புள்ளிகளும் உயர்ந்துள்ளது.
சமீபத்தில் வெளியான ஐசிசி ரேங்க் பட்டியலில் பாகிஸ்தான் அணி 3885 புள்ளிகள் பெற்று 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தென்ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.