இந்தியாவுக்கு எளிய இலக்கை கொடுத்த நியூசிலாந்து: அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 3 விக்கெட்!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (14:22 IST)
இந்தியாவுக்கு எளிய இலக்கை கொடுத்த நியூசிலாந்து: அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 3 விக்கெட்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இந்த நிலையில் 161 என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியில் நீண்ட பேட்டிங் வரிசையை இருப்பதால் இந்த இலக்கை எட்டி விடும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் கணித்துள்ளனர். இருப்பினும் கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இன்றைய போட்டியின் முடிவு வரை நான் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்