ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி… மோடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (11:53 IST)
இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் தொடருக்கு செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்த இந்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் தொடர் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து செல்லும் 100க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களை காணொலி வாயிலாக விரைவில் சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்