6 விக்கெட்டுக்களை வீழ்த்திய மெண்டிஸ்: இலங்கை - மே.இ.தீவுகள் டெஸ்ட் விபரம்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (08:33 IST)
6 விக்கெட்டுக்களை வீழ்த்திய மெண்டிஸ்: இலங்கை - மே.இ.தீவுகள் டெஸ்ட் விபரம்!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மெண்டிஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்
 
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதன் பின்னர் மேற்கு இந்திய தீவு முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கை அணி தற்போது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளையுடன் இந்த டெஸ்ட் போட்டி முடிவடையாததால் இந்த போட்டியை டிராவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றைய முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் மெண்டிஸ் மிக அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்